அசுர வளர்ச்சியடையும் புதிய கட்சி: ரணில் தலைமையிலான அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சி விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதாக புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமை எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவிற்கு ஆதரவு
மௌபிம ஜனதா கட்சியின் ஆரம்ப விழாவானது, கடந்த நவம்பர் மாதம் 05 ஆம் திகதி காலி மாநகர சபை கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
அதன்போது, இந்த புதிய கட்சி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
30 வருட அரசியல்
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் கலாச்சாரத்தை மாற்றும் வகையில் தமது கட்சி செயல்படுமென கட்சி ஆரம்ப விழாவில் உரையாற்றிய திலித் ஜயவீர தெரிவித்தார்.
அத்துடன், தாம் அரசியலுக்குள் திடீரென குதிக்கவில்லை எனவும் தமக்கு 30 வருட அரசியல் அனுபவம் இருப்பதாகவும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |