சென்னை அணிக்காக அறிமுகமாகும் அதிரடி வீரர்கள்!
எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் அணிகளினால் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது.
19ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இடம்பிடிக்கவுள்ள ஏனைய அணி வீரர்களின் பட்டியல் தொடர்பில் வெளியாகிய செய்திகள் தற்போது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
லிவிங்ஸ்டன் - மெக்ஸ்வெல்
அதன்படி பெங்குளூரு அணியின் சகலதுறை வீரரான லியாம் லிவிங்ஸ்டன், மற்றும், பஞ்சாப் அணியின் சகலதுறை வீரரான மெக்ஸ்வெல் ஆகியோர் சென்னை அணியில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் பின்னணியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்படவுள்ளதாக கூறப்படும் ரவிந்திர ஜடேஜா தொடர்பிலும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |