ஐ.பி.எல் 2026 தக்கவைப்பு பட்டியலில் ஜடேஜா! சஞ்சு சாம்சனையும் கோரும் சி.எஸ்.கே நட்சத்திரம்
ஐபிஎல் 2026 வர்த்தக சாளரத்தில், சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மற்றும் கே.எல் ராகுலை கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இணைக்க தீவிர நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சஞ்சு சாம்சனை அணியில் இருந்து விடுவிக்க ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணி கோரிய நிலையில் சி.எஸ்.கே அதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
கே.கே.ஆர் அணி
மேலும், கே.கே.ஆர் தங்கள் அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானேவை மாற்ற விரும்பம் தெரிவித்துள்ளது.

எனவே அவர்கள் ராகுலை விரும்புவதாகவும், டிசம்பர் நடுப்பகுதியில் ஏலம் எதிர்பார்க்கப்படுவதால், எதிர்வரும் வாரங்கள் சில அதிர்ச்சியூட்டும் ஒப்பந்தங்களையும், அணிகளுக்கு இடையே ஆச்சரியமான நகர்வுகளையும் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2026 தக்கவைப்பு காலக்கெடுவிற்கு முன்னதாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கான பேச்சுவார்த்தை
சஞ்சு சாம்சனுக்கான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவை அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பல பருவங்களாக ஜடேஜாவுடன் களத்தைப் பகிர்ந்து கொண்ட ரெய்னா, சகலதுறை வீரர் ஒரு அணியின் சொத்து என்று கூறியுள்ளார். மேலும் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அவரது பங்களிப்புகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதே நேரத்தில் சாம்சன் சி.எஸ்.கேவில் சேரலாம், ஆனால் ஜடேஜாவை இழப்பது ஐந்து முறை சாம்பியனான அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று ரெய்னா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |