இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் புதிய விலைகளில் மாற்றம்
இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களின் விலைகள் சிறிதளவு அதிகரிக்கக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மன்னாகே தெரிவித்துள்ளார்.
குறித்த விடயமானது, வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் (Ranjith Siyambalapitiya) இடையில் நேற்றைய தினம் (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்தோடு, அங்கு பொதுப் போக்குவரத்து வாகனங்கள் முதலாவதாகவும், மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் என்பவற்றை இரண்டாவதாகவும் கொண்டு வருவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
4 கட்டங்கள்
மேலும், சாதாரண கார்கள் மற்றும் சொகுசு வாகன இறக்குமதிக்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், 4 கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பான அறிக்கை விரைவில் வாகன இறக்குமதியாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |