நீர்க்கட்டண அதிகரிப்பிற்கான நிரந்தர விலைச்சூத்திரம் - டிசம்பரில் வெளியிட திட்டம்
Jeevan Thondaman
Water
By Kathirpriya
தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
விலைசூத்திரம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்மிடம் உள்ள 324 நீர் உற்பத்தி நிலையங்களில் 2 சதவீதம்தான் சூரிய சக்தியில் செயற்படுகின்றது.
ஏனையவை அனைத்தும் மின்சாரத்தில் தான் இயங்குகின்றன,
எனவே, மின் கட்டணம் ஒரு வீதத்தால் அதிகரித்தால்கூட நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தி தொகுப்பில் காண்க.
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி