சிறிலங்காவின் புதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் இந்திய தொடர்பு
இந்திய தொடர்பு
இலங்கையின் புதிய பிரதமரான தினேஸ் குணவர்த்தனவின் இந்திய தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினேஸ் குணவர்த்தனவின் தந்தையான டொன் பிலிப் ரூபசிங்க குணவர்தன, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு வகித்தவர் என்ற செய்தி தற்போது பரவலாக பேசப்படுகின்றது.
பிலிப் குணவர்தன 1901ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி இலங்கையில் பிறந்துள்ளார். இலங்கையில் தனது உயர்கல்வியை முடிக்காமலேயே, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார்.
பின்னர் லண்டனுக்கு சென்று, சுதந்திரப் போராட்ட வீரர்களான ஜோமோ கென்யாட்டா மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பான இந்திய லீக்கில் கிருஷ்ண மேனன் மற்றும் நேருவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்