தினேஷை நீக்கி மகிந்தவை பிரதமராக்கும் திட்டம் - கசியவிட்ட ஆளுங்கட்சி!
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Mahinda Rajapaksa
Prime minister
Government Of Sri Lanka
By Pakirathan
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கி புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சவை கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆளுங்கட்சியிலுள்ள பலர் தமது ஆதரவுகளை கோரியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கசியவிட்ட ஆளுங்கட்சி
பிரதமர் பதவியை மாற்றுவதற்கான திட்டங்களை ஆளுங்கட்சியில் உள்ள சிலர் தமக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.
பிரதமர் பதவியை மாற்றுவதால் மாத்திரம் இந்த நாட்டின் பிரச்சனை தீரப்போவதில்லை, முழு அரசாங்கமும் வீட்டிற்கு செல்ல வேண்டும், அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி