நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி: ஐ.எம்.எப் வெளியிட்ட தகவல்
Sri Lankan Peoples
IMF Sri Lanka
Income Tax Department
By Dilakshan
சர்வதேச நாணய நிதியம் (IMF)அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது.
இலங்கையில் (Sri Lanka) அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக நிதி நிதியத்தினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மீளாய்வு
இலங்கையுடனான கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரி முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த புதிய கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்