இன்று முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை!
Government Employee
Government Of Sri Lanka
By Pakirathan
அரச ஊழியர்கள் பணிக்கு செல்லும் போதும், பணி முடிந்து வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர் செலவு

அதேசமயம், 17 லட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்கு வருடாந்தம் 1.4 ட்ரிலியன் ரூபா செலவு ஏற்படும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
செலவிடப்படும் பணத்துடன் ஒப்பிடும் போது அவர்களால் நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையான நலன் கிடைக்கிறதா என நாம் சிந்திக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.