அதிவேக நெடுஞ்சாலையில் புதிய அபராத விதிகள்: வெளியான அறிவிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீற்றருக்கு மேல் வாகனம் ஓட்டுபவர்கள் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பிரதி காவல்துறை அதிபர் இந்திகா ஹபுகொட (Indika Habugoda) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 100 கிலோ மீற்றருக்கு மீறினால் திருத்தப்பட்ட அபராத தொகைகளை கோடிட்டுக் காட்டும் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேகமாக வாகனம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதற்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டமைப்பின்படி, மணிக்கு 100 முதல் 120 கிலோ மீற்றர் வரை வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீற்றர் வரை வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும்.
130 முதல் 140 கிலோ மீற்றர் வரையிலான வேகத்திற்கு ரூபாய் 10,000 அபராதமும், மணிக்கு 140 முதல் 150 கிலோ மீற்றர் வரையிலான வேகத்திற்கு ரூபாய் 15,000 அபராதமும் விதிக்கப்படும்.
ஒரு வாகனம் மணிக்கு 150 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் ஓட்டப்பட்டால், நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
