சிறிலங்காவின் சகல பாடசாலைகளிலும் புதிய நடைமுறை! முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை
Ministry of Education
A D Susil Premajayantha
By Kanna
போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி, நாட்டில் உள்ள சகல பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் இனி பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், " ஹெரோயினை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் சட்டவிரோத செயல் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்", எனக் குறிப்பிட்டார்.

