ரணிலின் அதிரடி உத்தரவு - கட்டுநாயக்காவில் அறிமுகமாகவுள்ள புதிய தொழில்நுட்பம்..!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அதிநவீன ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகள் கொண்டு வரும் கைப்பைகளை பரிசோதிக்க உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இருந்ததாகவும், ஆனால் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அதற்கான வசதி இல்லை எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, சிறப்பு பயணிகள் முனையம் வழியாக வரும் பிரமுகர் கைப்பைகள் சோதனை செய்யப்படாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள்
சிறப்பு பயணிகள் முனையங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறப்பு பயணிகள் முனையங்களில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, வரி செலுத்தாமல் சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் விசேட பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் வெளியேறும் முனையத்தில் இந்த சாதனங்களை நிறுவுமாறு அதிபரின் செயலாளர் அறிவித்துள்ளார்.
