அமெரிக்க ஆதரவுடன் புதிய பல்கலைக்கழகம்
புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவுவது தொடர்பான அதிபரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளன.
அத்தகைய பல்கலைக்கழகத்தின் மூலம், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், உலகளாவிய கல்வித் தொடர்பை வளர்க்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அடிப்படை சூழலை உருவாக்கவும் முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.
முக்கியமான துறைகள்
UC Berkeley, UC Riverside, UC Davis, University of Michigan உள்ளிட்ட பல அடையாளம் காணப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரு கூட்டாளர் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் உத்தேச புதிய பல்கலைக்கழகம் பொதுத் தனியார் கூட்டாண்மையாக நிறுவப்படவுள்ளது.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றின் முக்கியமான துறைகளை வழிநடத்த திறமையான நிபுணர்களின் குழுவை உருவாக்குவதற்கான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |