மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்

Iran Iran-US Conflict Mojtaba Khamenei
By Dharu Aug 08, 2026 09:22 PM GMT
Report

ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும் முன்னாள் உச்சத் தலைவருமான அலி கமேனி, ஈரான் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற பின்னர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை.

அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை

அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை

மதப் பாடம் நடத்தும் கமேனி

அரசு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் மூலம் மட்டுமே அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன.

மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான் | New Video Of Iranian Supreme Leader Mojtaba

தற்போது வெளியாகியுள்ள காணொளியில், மொஜ்தபா கமேனி ஒரு குழுவினருக்கு மதப் பாடம் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காணொளி போர் தொடங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், அது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து அரசு ஊடகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த காணொளி தற்போது ஏன் வெளியிடப்பட்டது என்பதும் தெளிவாக இல்லை. இதனால் மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து புதிய ஊகங்கள் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் காணொளியை வெளியிட்ட ஊடகங்களில் ஒன்றான குறித்த செய்தி நிறுவனம், ஈரான் அரசுடன் நெருக்கமானதாகக் கருதப்படும் அரை - அதிகாரப்பூர்வ ஊடகமாகும்.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவிற்கு ஈரான் விதிக்கும் நிபந்தனை

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவிற்கு ஈரான் விதிக்கும் நிபந்தனை

எலும்பில் முறிவு

இருப்பினும், இந்தக் காட்சிகள் இதுவரை ஈரானின் பிற ஊடகங்களில் பரவலாக வெளியாகவில்லை.

மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் CNN-க்கு தகவல் வழங்கிய வட்டாரங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலின் முதல் நாளில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன், முகத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள காணொளியில் அவரது உடலில், குறிப்பாக முகம் அல்லது காலில், காயம் ஏற்பட்டதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.

இதனால், புதிய உச்சத் தலைவரின் உடல்நிலை மற்றும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

பலனற்ற இராணுவ வழிமுறைகள் : ஈரான் போரிலிருந்து வெளியேறும் வழியைத்தேடும் அமெரிக்க தளபதி

பலனற்ற இராணுவ வழிமுறைகள் : ஈரான் போரிலிருந்து வெளியேறும் வழியைத்தேடும் அமெரிக்க தளபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026