அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது பாகர் சுல்காதர் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகள் அந்தப் பட்டியலில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனகம்
இதன்படி "களத்திலும் வீதிகளிலும் 160 நாட்கள் உறுதியாகப் போராடி, ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனப்படுத்திய கோரிக்கைகள் இவை," என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தனது நடத்தையைத் திருத்திக்கொள்ளும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது," எனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |