பிரிகோஜின் உயிருடனா..! ரஷ்யாவுக்கு புதிய அதிர்ச்சி
விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்த நிலையில், பிரிகோஜினின் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில் பேசிய பிரிகோஜின், நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களிடம் நான் எப்படி இருக்கிறேன் என கேட்கிறேன்.
தற்போது 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் இரண்டாவது வாரம், நான் ஆபிரிக்காவில் உள்ளேன்.
தற்போது வரை என்னையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும், நான் சம்பாதித்ததையும், இன்னும் பலவற்றையும் அழிக்க நினைப்பவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் அனைத்தும் சரியாக உள்ளது' என தெரிவிப்பதாக அந்த காணொளி பகிரப்பட்டு வருகிறது.
பிரிகோஜின் உயிரோடு உள்ளாரா
A video of Prigozhin appeared that is reportedly filmed in Africa not long before his death.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) August 31, 2023
"So, fans of discussing my death, intimate life, earnings, etc., I am doing fine," Prigozhin says. pic.twitter.com/UcIKpgLNZi
இந்தக் காணொளியால் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் உயிரோடு உள்ளாரா? அல்லது அவர் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
பிரிகோஜின் கடந்த 24ஆம் திகதி தனியார் விமானம் மூலம் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றார்.
விமான விபத்து

அப்போது, பிரிகோஜின் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தது உறுதியானதாக ரஷ்யா தெரிவித்தது.
இந்த நிலையில், பிரிகோஜினின் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.