சுற்றுலாவிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை
sri lanka
tourist
procedure
new visa
By Vanan
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாவிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறைக்கான அறிவிப்பை சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிடவுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு வருட பல நுழைவு சுற்றுலா விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த விசாவிற்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விசாவை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 90 நாட்கள் தங்கியிருப்பதற்கு இது பல வாய்ப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பின் அடிப்படையில் புதிய விசா நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்