ஏழு மணி நேரம் நீடித்த புதிய கட்டத் தாக்குதல்! ஈரானை அதிர வைத்த அமெரிக்கா
ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு ஈரானிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் பம்பூரில் தரைப்படையைச் சேர்ந்த, பணியில் இருக்கும் மற்றும் இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட்ட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் மற்ற வீரர்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிவைக்கப்பட்ட இராணுவத் தளங்கள்
அமெரிக்கத் தாக்குதல்கள் இராணுவத் தளத்தின் படைவீரர் தங்குமிடங்கள், தங்கும் வசதிகள், காவலர் சாவடிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகையைக் குறிவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழு மணி நேரம் நீடித்த புதிய கட்டத் தாக்குதல்களில் பல இராணுவ இலக்குகளை தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |