அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்! பல ட்ரோன்கள் அழிப்பு
பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அத்தோடு இதன் போது பல அமெரிக்க ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) செய்தி இதனை குறிப்பிட்டுள்ளது.
புரட்சிகர காவல் படை
இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது விரோதப் போக்கைத் தொடரும் வரை இப்பிராந்தியத்திலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் மேலும் தாமதப்படுத்த மட்டுமே வழிவகுக்கும் எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |