ஒழுக்கத்தை மீறிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் - எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!
சமூக ஒழுக்கத்தை மீறும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை, புத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை கண்டறிய விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என புத்த சாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நிகழ்வுகள்
நாட்டின் பல பகுதிகளில் சமூக ஒழுக்கத்தை மீறிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், குறித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் விதமான புத்தாண்டு விளையாட்டுக்கள் நிகழ்வுகள் நடத்தப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
