புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் தீபம் ஏற்றி வழிபாடு
நல்லூர் கந்தசுவாமி கோவில்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு வரவேற்கப்பட்டது.
வவுனியா
வவுனியா - இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புது வருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று இடம் பெற்றிருந்தன.

நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா தலைமையில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதோடு விசேட வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தது.
இதன்போது நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு
2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்று கூடியதை காண முடிந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |