காவல்நிலையத்தில் நடந்த புதுவருட கொண்டாட்டம்! (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் நேற்று சிங்கள தமிழ் புத்தாண்டு மிக சிறப்பாக இடம்பெற்றது
தமிழ் சிங்கள புத்தாண்டு முன்னிட்டு விசேடமாக இடம்பெற்ற நிகழ்வில் காலை வேளையில் இனிப்பு பண்டங்கள் பரிமாறி ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன
பணிஸ் உண்ணுதல்,தேசிக்காய் கரண்டி,முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் கயிறிழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன
பொதுமக்கள் - காவல்துறையினர்
ஒட்டுசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சித் வமுனுசிங்க அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.றமேஸ் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான இ.சந்திரரூபன், மற்றும் ச.கணேசபிள்ளை ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர் ஊழியர்கள் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சி.நாகேந்திரராசா ஒட்டுசுட்டான் பிரதேச வர்த்தக பிரமுகர்கள் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் காவல்துறை பாதுகாப்பு குழு உறுப்பினர் பொதுமக்கள் காவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்






