நியூஸிலாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர்? சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
நியூஸிலாந்தின் - ஆக்லாந்தில் சிறப்பு அங்காடி ஒன்றில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டு சுட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் அந்த நாட்டிடம் கோரியுள்ளது.
இலங்கை தூதுவரின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நியூஸிலாந்தின் - ஆக்லாந்தில் சிறப்பு அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலானது, பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் தொடர்பில் தகவல் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே அவர் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
