துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த குழந்தை மீட்பு - பெற்றோர் உயிரிழப்பு (காணொளி)
துருக்கியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு மரண ஓலம் தொடர்கிறது.
மீட்பு பணியாளர்கள் தங்களது பணியை விரைவாக முன்னெடுக்க காலநிலை விட்டு கொடுப்பதாக தெரியவில்லை.இதனால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மெதுவாகவே இடம்பெறுவதாக தெரியவருகிறது.
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த குழந்தை
இந்த நிலையில் நிலநடுக்கங்களுக்கு மத்தியில், இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்து உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பெற்றோர் உயிரிழந்த நிலையில், பிறந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்ததால், இந்தக் குழந்தை அதிசய குழந்தை என அழைக்கப்படுகிறது.
புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மற்றும் அதன் குடும்பத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி
One of the youngest survivors of the earthquake in Turkey. One baby that was rescued in Aleppo was born under the rubble (video) #Turkey #Turkiye #TurkeyEarthquake #earthquaketurkey #Syria #Syrie pic.twitter.com/ZdCorQ2vQo
— REPORT WAR (@troy_dalio) February 6, 2023
நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதாக அறியப்படுகிறது. வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரஸில், இருள், மழை மற்றும் குளிர் சூழ்ந்துள்ளதால், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரைக் காப்பாற்ற ஒரு மாபெரும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
ஆனால் பெற்றோர்கள், பூகம்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்ப முடியவில்லை.இதனால் குழந்தை அனாதையாகியுள்ளது.
