வடக்கில் இடியுடன் கொட்டப்போகும் மழை : நா.பிரதீபராஜா வெளியிட்ட தகவல்

Tamils Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka Weather
By Raghav Jun 08, 2025 01:19 PM GMT
Report

வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யும் என யாழ். (Jaffna) பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

முகப்புத்தகத்தில் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

திரைக்குப் பின்னால் நடக்கும் டீல் : தில்லாலங்கடி கூட்டணிகள் - மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

திரைக்குப் பின்னால் நடக்கும் டீல் : தில்லாலங்கடி கூட்டணிகள் - மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

இடியுடன் கூடிய மழை

நண்பகல் வரை மிகவும் வெப்பமான வானிலை நிலவும். ஆனால் பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

வடக்கில் இடியுடன் கொட்டப்போகும் மழை : நா.பிரதீபராஜா வெளியிட்ட தகவல் | Next 24 Hours Weather Heavy Rains In Sri Lanka

நண்பகல் வரையான கடும் வெப்பத்தினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் மாலை நேரத்தில் மழை கிடைப்பதால் வெப்பம் தணியலாம் என எதிர்பார்க்கின்றது.

இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது. 

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் ஏர் லைன்ஸ்: தற்போதைய நிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் ஏர் லைன்ஸ்: தற்போதைய நிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பலத்த காற்று

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வௌியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் இடியுடன் கொட்டப்போகும் மழை : நா.பிரதீபராஜா வெளியிட்ட தகவல் | Next 24 Hours Weather Heavy Rains In Sri Lanka

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

திரைக்குப் பின்னால் நடக்கும் டீல் : தில்லாலங்கடி கூட்டணிகள் - மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

திரைக்குப் பின்னால் நடக்கும் டீல் : தில்லாலங்கடி கூட்டணிகள் - மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

சரிகமபவில் நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

சரிகமபவில் நடுவர்களையே எழுந்து நிற்க வைத்த ஈழத்து போட்டியாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026