சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
புத்தளம்(Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் நடவடிக்கை
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் இந்த பகுதிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அமைய கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
