இலங்கைக்கு ஆபத்தான அடுத்த ஓரிரு வாரங்கள் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
உலகம் முழுவதும் ஒமைக்ரோன் பிறழ்வு மிக வேகமாக பரவி வருகின்றமையினால், எதிர்வரும் ஓரிரு வாரங்கள் இலங்கைக்கு சவால் மிக்கது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன (Shanna Jayasumana)தெரிவித்துள்ளார்.
எனவே இயலுமான வரை விரைவாக , பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
20 வயதுக்கு மேற்பட்ட தரப்பினர், இரண்டாவது மருந்தளவை செலுத்திக்கொண்டு, மூன்று மாதங்கள் பூர்த்தியானால் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்றாவது மருந்தளவிற்கு தேவையான பைசர் தடுப்பூசி, போதுமானளவு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முதலாவது மற்றும் இரண்டாவது மருந்தளவுகளை செலுத்திய சிலருக்கு 5 அல்லது 6 மாதங்கள் கடந்துள்ளமையினால், அந்த தடுப்பூசியின் செயற்பாடு தற்போது வலுவிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
