நாமல் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்! மகிந்தவின் சகா பகிரங்கம்
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படும்.
பெரமுன வேட்பாளர்
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவோ அல்லது பொதுவேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளேன்.
பலவீனமான வேட்பாளரை அதிபர் வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமை உள்ளவர் ஒருவர் பொதுஜன பெரமுனவில் தற்போது இல்லை. கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடமாட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தகைமையற்றவர். இதனை நான் அவரிடமே கூறியுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |