2030 ம் ஆண்டு வரை அதிபராக ரணில் - 2024 ம் ஆண்டு தேர்தல் வெற்றி உறுதி!
அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
2024 ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், அதில் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பிரத்தியேக ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த அதிபர் தேர்தலில் ரணில்
2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று 2030 ம் ஆண்டு வரை அவர் அதிபராக நீடிப்பார் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுகளுடன் போட்டியிடுவார் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

