இஸ்ரேலின் மிகப்பெரிய ஊடுருவல் தாக்குதல்! சின்னாபின்னமாகும் ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மிகப்பெரிய தரைவழி ஊடுருவல் தாக்குதலை இரவோடு இரவாக இஸ்ரேல் நேற்றிரவு ஆரம்பித்துள்ளது.
இதுவரை வான் வழித் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று(26) இரவு தரை வழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
சின்னாபின்னமாகும் காசா
இஸ்ரேலிய தரைப்படைகள் வடக்கு காசா பகுதிக்குள் சோதனை அடிப்படையில் நுழைந்து ஹமாஸ் இலக்குகளைத் கடுமையாக தாக்கியது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் விடுத்த அறிவிப்பில், தற்போது நடைபெற்று வரும் போரின் மிகப்பெரிய ஊடுருவல் இதுவே ஆகும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காணொளியில் இஸ்ரேல் அதன் தரைவழிப் படைகள் காசாவில் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
கடந்த சில நாட்களாக, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் பல பகுதிகளை முற்றிலுமாக அழித்து, நிவாரணப் பணிகளுக்கு இடையூறு விளைவித்து, சுற்றுப்புறங்களை சீர்குலைத்து வருகின்றது.
YOU MAY LIKE THIS