கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி : பிரேசில் ‘சூப்பர் ஸ்டார்’ நெய்மர் காயம்
Football
Brazil
FIFA World Cup
Neymar
By Jaso
2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பிரேசிலின் சூப்பர் ஸ்டார் நெய்மர் காயமடைந்துள்ளார்.
பிரேசிலின் உள்நாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்றபோது அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும்
காயத்தின் காரணமாக அந்த முன்கள வீரர்சுமார் மூன்று வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரேசிலின் உலகக் கோப்பைக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகளையும், ஜூன் 13 அன்று நியூ ஜெர்சியில் ஆபிரிக்க சாம்பியனான மொராக்கோவுக்கு எதிராக நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியையும் நெய்மர் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி