பாடசாலையை சுற்றிவளைத்த ஆயுததாரிகள் : 300 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
வடமேற்கு நைஜீரியாவில் பாடசாலை ஒன்றை சுற்றிவளைத்த ஆயுததாரிகள் அங்கிருந்து 300க்கும் அதிகமான மாணவர்களை கடத்திச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குரிகா பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை (07) இந்தக் கடத்தல் இடம்பெற்றதை கடுனா மாநில உள்ளூர் அரச அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
275 மாணவர்களை காணவில்லை
கடத்திச் செல்லப்பட்ட 25 மாணவர்கள் வீடு திரும்பியபோதும் தொடர்ந்தும் 275 மாணவர்களை காணவில்லை என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமற்போன மாணவர்களில் 175 பேர் 08 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்புக் குழு
இவர்களை மீட்பதற்கு தேடுதல் மற்றும் மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
I have received briefings from security chiefs on the two incidents in Borno and Kaduna, and I am confident that the victims will be rescued. Nothing else is acceptable to me and the waiting family members of these abducted citizens. Justice will be decisively administered.
— Bola Ahmed Tinubu (@officialABAT) March 8, 2024
To…
இந்தக் கடத்தலில் தப்பிய ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, மாணவர்களை மீட்பதற்கு உள்ளூர் மக்கள் முயன்றார்கள், ஆனால் ஆயுததாரிகள் அதனை முறியடித்ததோடு இதில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றார்.
பணத்திற்காக கடத்தல்கள்
ஆபிரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் பணத்திற்காக கடத்தல்கள் இடம்பெறுவது வழக்கமானதாகும். கடந்த காலங்களிலும் இவ்வாறு பாடசாலை மற்றும் கல்லூரிகளில் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
UNICEF is concerned by the reports of abduction of students in Kaduna State.
— UNICEF Nigeria (@UNICEF_Nigeria) March 7, 2024
We urge immediate action to ensure the safe return of the abducted children and staff & call on authorities to implement measures to secure schools across ??
Read full statement?https://t.co/Aw3oiL3tPW
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |