மகிந்தவுடனான சந்திப்பு பதிலளித்த நிலந்தி கொட்டஹச்சி!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பது போல் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை மறுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள திருமண நிகழ்வில் தான் கலந்துக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகநூல் பதிவு
குறித்த நிகழ்விற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தன்னை தொடர்புபடுத்தி பகிரப்பட்டு வரும் புகைப்படம் திரிபுபடுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசுவதைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
குறித்த புகைப்படத்தை பகிர்ந்து பலரும் தனது விமர்சனங்களை தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ரணிலின் மருத்துவ அறிக்கைகள் மீது சந்தேகம் : நீதிமன்றில் கடும் வாக்குவாதம்... பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |