மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு முக்கிய சான்றிதழ்!
மத்தள சர்வதேச விமான நிலையம் வனவிலங்குகளின் பாதிப்பு இல்லாத விமான நிலையமாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையினால் விசேட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்திற்கு வன விலங்குகளின் அச்சுறுத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்தள விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடும் விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இழப்பை குறைக்க நடவடிக்கை
இந்த நிலையில், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் விமான சேவைகளின் எண்ணிக்கை நான்கு என தெரிவிக்கப்படுகிறது.

புதிய விமான சேவைகளின் வருகையின் மூலம் விமான நிலையத்தின் செயற்பாட்டு இழப்பை குறைக்க முடியும் என பிரதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது மத்தள விமான நிலையத்திற்கு மாதாந்தம் 25 கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |