சிஐடியிடம் சிக்கிய கோட்டபயவின் நெருங்கிய சகா...! சிதையும் பாதுகாப்பு வளையம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிழலாகவும், அவரது நம்பிக்கைக்குரிய வலது கையாகவும் கருதப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் டபிள்யு. திலகரத்ன கைது செய்யப்பட்டிருப்பது, கோட்டாபயவின் அரசியல் பாதுகாப்பு வளையத்தை முழுமையாகச் சிதைத்துள்ளது.
கடந்த காலங்களில் மூடிமறைக்கப்பட்ட பல பாரிய குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து திலகரத்னவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அதன் மூலம் நேரடியாகப் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு புலனாய்வுப் பிரிவில் இருந்து அனைத்து ரகசியங்களையும் கையாண்ட அதிகாரியே இப்போது கைதாகியுள்ள நிலையில், அவரிடமிருந்து பெறப்படும் தகவல்கள் கோட்டாபய ராஜபக்சவை நேரடியாகச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், அதிகார அடுக்குகளின் முக்கிய புள்ளிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்படுவது, விசாரணை வளையம் இப்போது அதன் இறுதி இலக்கான கோட்டாபய ராஜபக்சவை நோக்கியே நகர்கிறது என்பதற்கான ஒரு பகிரங்கமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
வெறும் அரசியல் பழிவாங்கல் என்பதற்கு அப்பால், முறையான ஆதாரங்களுடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு இறுதித் தயாரிப்பாகவே இந்த அதிரடி கைது நடவடிக்கை அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய ஆய்தம் நிகழ்ச்சி...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |