நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ்

SriLankan Airlines COVID-19 Nimal Siripala De Silva
By Beulah Jul 01, 2023 06:12 AM GMT
Report

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து  நட்டம் ஈட்டி வருகின்றமையினால் இதனை விரைவாக மறுசீரமைக்க தவறினால் நிறுவனத்தின் 6000 ஊழியர்கள் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படுவதுடன் அந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

30 மில்லியன் இலாபம்

நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் | Nimal Siripala De Silva Said Srilankan Airlines

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் அதிபர் ஊடக மையத்தில் நேற்று(30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், பல தசாப்தங்களுக்கு முன்பு எமக்கான தனித்துவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கன் விமான சேவை, எமிரேட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டபோது 30 மில்லியன் இலாபம் ஈட்டியிருந்தது.அதன் பின்னரான காலப்பகுதியில் எவ்வித இலாபங்களையும் ஈட்டவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு நாளும் விமானங்களை கண்டிராத மற்றும் விமானங்களில் காலடி வைக்க முடியாமல் இருக்கும் சாதாரண மக்களின் பணத்தினாலேயே இந்தச் சேவைகள் நடத்தப்படுகின்றன.

எமக்கென்ற தனியொரு விமான சேவை இருப்பது பெருமைக்குரியதாக இருந்தாலும் அதனை நடத்திச் செல்வதற்கு வழங்கப்படும் செலவு மிக அதிகமானதாக உள்ளதெனவும் தெரிவித்தார்.

இன்றுவரை சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளது.

கடன் நெருக்கடிக்கு மத்தியில் 

நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் | Nimal Siripala De Silva Said Srilankan Airlines

சர்வதேச பிணைமுறிகளின் கீழ் குத்தகைக்கு பெறப்பட்ட விமானங்களுக்கான கடன் தொகையை உள்நாட்டு வங்கிகள் உள்ளடங்கலான சில நிறுவனங்களே செலுத்தியுள்ளன என்றும், எரிபொருள் கடனையும் செலுத்த வேண்டியிருப்பதாகவும் , கடன் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவையொன்றை நடத்திச் செல்வது சாத்தியமற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டுக் கையிருப்பு போதாமை உள்ளிட்ட பிரச்சினைகளின் காரணமாக முன்பை போன்று அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

அவ்வாறு வழங்குவதும் நியாயமற்றது என்பதாலேயே சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அமைச்சரவை அனுமதி

நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் | Nimal Siripala De Silva Said Srilankan Airlines

அதன்படி 51 சதவீதத்தினை அரசிடம் தக்கவைத்துக்கொண்டு மிகுதியான 49 சதவீதத்தினையே மறுசீரமைப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் யோசனைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுனத்தின் கீழான இறங்குதுறைப் பணிகள் மற்றும் உணவு வழங்கல் நிறுவனம் ஆகியன வருமானம் ஈட்டுகின்றன. இருப்பினும் அதனால் விமான சேவையின் நட்டத்தை ஈடு செய்ய முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குள் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தச் செயற்பாடுகளின் பின்னர் அதன் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொண்டு உரிய முதலீடுகளுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் | Nimal Siripala De Silva Said Srilankan Airlines

அதன் பின்னர் அதன் மேலதிக அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதனை செய்யத் தவறினால் அந்த நிறுவனத்தின் 6000 ஊழியர்கள் தொழிலை இழக்கும் நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் உலகின் அனைத்து நாடுகளினதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளும் நாடுகளுக்கு வரவில்லை. சில நாடுகளின் விமானங்கள் விமான நிலையங்குள்ளேயே தரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கட்டார் விமான சேவையின் விமானிகள் 70 பேர் பணி நீக்கப்பட்டனர். இருப்பினும் எமது விமான சேவை ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

விமானிகள் வீடுகளில் இருந்தாலும் அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையிலான மனிதாபிமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

கொவிட் தொற்றின் பின்னர் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்தது.

அந்த அனைத்து நிலைமைகளையும் சீரமைத்த பின்னர் விமான சேவையை மீள ஆரம்பிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

இதனால் நாளாந்தம் பெருமளவான சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026