பனை மரத்துடன் மினி வான் மோதி விபத்து: ஒன்பது பேர் படுகாயம்
மன்னார் தலைமன்னார் வீதியில் பனை மரத்துடன் மினி வான் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (10-05-2026) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி வான் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர்.

இந்தநிலையில் விபத்தில் சிக்கிய ஒன்பது பேரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் தலைமன்னார் மற்றும் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அன்றாட வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Nayan Nayan
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்