மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து மூடப்படும் பாடசாலைகள்...! வெளியான அறிவிப்பு
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் நிலைமை
குறித்த விடயத்தைத் தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூஸ் இருமொழிப் பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளானது நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் இந்தக் காய்ச்சல் நிலைமை காரணமாகக் கடந்த 7 ஆம் திகதி முதல் குறித்த பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |