ஜே.வி.பி அரசு மறைமுகமாக நிறைவேற்றும் நாசகாரசெயல்: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு
இலங்கையில் 2024 க்கு முன்னர் ஆட்சி அமைத்த அரசாங்கங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதகமான நகர்வை முன்னெடுத்து வந்தததே அதையே தற்போதைய அரசாங்கமும் தொடருகின்றது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு ஜனநாயக வெளியை ஏற்படுத்தாது மக்களை அடக்கி ஆளும் நிலையையே தற்போதும் இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கூறியுள்ளார்.
அத்தோடு தற்போது தமிழ் தேசிய கட்சிகளும் தங்கள் இருப்பை தக்கவைத்துகொள்ள சுயலாப அரசியல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு தமிழ் தேசியத்தின் இருப்பு எந்தளவு தற்போதைய இளைஞர்கள் மத்தியில் நிலைகொண்டுள்ளது, அதற்கு இந்த அரசியல் தலைமைகள் எவ்வாறான நகர்வை முன்னெடுக்கின்றனர் என்பதை விளக்கிய அவரின் கருத்துக்களை வெளிக்கொண்டு வருகிறது ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |