ஹோர்முஸில் தொடரும் கப்பல் போக்குவரத்து முடக்கம்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (Kpler) நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த இரண்டு கப்பல்களில் ஒன்று ஈரானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த தானியக் கப்பல், மற்றொன்று எதிர் திசையில் சென்ற காலியான உலர் சரக்குக் கப்பல் (Dry bulk ship) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி எண்ணிக்கை
இதுதவிர, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் செல்லும் காலியான டேங்கர் கப்பல் ஒன்று நீரிணை வழியே பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன.
வெள்ளிக்கிழமை அன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எந்தவொரு கப்பல்களின் பயணமும் பதிவாகவில்லை.

அத்தோடு வியாழக்கிழமையன்று 9 கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன.
இது புதன்கிழமை பதிவான 5 கப்பல்களை விட அதிகம் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி தினசரி எண்ணிக்கையான 12-ஐ விடக் குறைவானதாகும்.
கண்காணிப்புக் கருவி
சில கப்பல்கள் தங்களின் கண்காணிப்புக் கருவிகளை (Transponders) அணைத்துவிட்டு இரகசியமாகப் பயணிக்கக்கூடும் என்ற போதிலும், கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்பு வரை தினசரி 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற நிலமையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.

இது குறித்து வெரிஸ்க் மேப்பிள்கிராஃப்ட் (Verisk Maplecroft) அபாய உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு பிராந்திய முதன்மை பகுப்பாய்வாளர் டார்ப்ஜோர்ன் சோல்வெட் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அதேவேளையில் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனே பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டிற்கான மிக முக்கிய பலமாக (Leverage) விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 9 மணி நேரம் முன்