யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையை புறக்கணித்த உறுப்பினர்கள்!
Tamils
Jaffna
By Shalini Balachandran
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அமர்வு இன்று (29-09-2026) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கீரிமலைப் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் இதுவரை அகற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 5 உறுப்பினர்கள், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 10 உறுப்பினர்கள் சபை அமர்வைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |