நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கிகள்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சூட்டுச் சம்பவங்கள்
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை 14 (T-56) ரக துப்பாக்கிகள், 33 கைத்துப்பாக்கிகள் மற்றும் 25 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 891 துப்பாக்கிகள் காவல்துறை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் மூலம் 74 டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 2,404 துப்பாக்கிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட மொத்தம் 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |