பலஸ்தீன வீடுகளை ஆக்கிரமித்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்: பிரான்ஸ் கடும் கண்டனம்
குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.
குடியேற்றவாசிகளின் தாக்குதல்
மேலும், இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது இரு-நாட்டுத் தீர்வுக்கு (Two-state solution) பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
#Israel/ #Palestine | Situation in the West Bank pic.twitter.com/DVjssdJ4vw
— France Diplomacy 🇫🇷🇪🇺 (@francediplo_EN) August 14, 2026
மறுபுறம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா பகுதியில் தீவிரமடைந்துள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) கூட, தாக்குதல்களில் ஈடுபட்ட அந்தக் குடியேற்றவாசிகளை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 10 மணி நேரம் முன்