ஹோர்முஸ் கேள்விகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் பெஷெஷ்கியன்
எதிர்வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அந்நாட்டு வட்டாரங்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் பெஷேஷ்கியன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டுக்கான தனது தலைமைப் பொறுப்பின் கீழ் இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துவதால், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இருதரப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினை
இந்த உச்சிமாநாடு, "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற இந்தியாவின் கருப்பொருளின் கீழ் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலிடமிருந்து பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. 2024 அக்டோபரில், ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, பெஷெஷ்கியன் - நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். 2024-ல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினரானது.
2025-ல் இந்தோனேசியா இந்த அமைப்பில் இணைந்ததன் மூலம், முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11-ஆக உயர்ந்தது. முன்னதாக ஜூன் மாதம், பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வந்தடைந்தார்.
கூட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அராக்சி, உலகளாவிய சமாதானத்தை நிலைநாட்டும் சக்தியாக இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எடுத்துரைத்தார்.
நிலவும் பதற்றமான சூழ்நிலை
மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதில் இந்தியா ஒரு பெரிய பங்கை ஆற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆயுத மோதலில் தெஹ்ரான் எதிர்காலத்தைக் காணவில்லை என்பதையும் அராக்சி தெளிவுபடுத்தினார். தற்போதைய நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு இல்லை என்றும், 'பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே' முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்றும் அவர் கூறினார்.
இந்திய மத்தியஸ்தத்திற்கு தெஹ்ரான் தயாராக இருப்பதை வலியுறுத்தும் வகையில், இந்தியாவின் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்திய அரக்சி, வர்த்தகப் பாதுகாப்பிற்காக நட்பு நாடுகள் ஈரானை நம்பியிருக்கலாம் என்று உறுதிப்படுத்தினார்.
மேலும், ஹோர்முஸில் பாதுகாப்பைப் பேணும் தனது வரலாற்றுப் கடமையை ஈரான் எப்போதும் நிறைவேற்றும் என்று அராக்சி தெளிவுபடுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 5 மணி நேரம் முன்