ஈரான் மீதான முற்றுகை: 62 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இன்று வரையிலான நிலவரப்படி முற்றுகை விதிகளை மீறாமல் பூரணமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக மூன்று கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன் (Disabled), இரண்டு கப்பல்களில் நேரில் சென்று சோதனைகளும் (Boarded) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்கள்
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையேயான மோதல்கள் மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14 முதல் இந்த முற்றுகை நடவடிக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
A U.S. Sailor directs an MH-60R Sea Hawk helicopter during nighttime flight operations aboard guided-missile cruiser USS Princeton (CG 59) as the ship sails in the Arabian Sea and enforces the U.S. blockade against Iran. As of Aug. 14, CENTCOM forces have redirected 62 commercial… pic.twitter.com/HDMlwcGzAq
— U.S. Central Command (@CENTCOM) August 14, 2026
இருப்பினும், அமெரிக்காவின் இந்த முற்றுகை சட்டவிரோதமானது என்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 11 மணி நேரம் முன்