நிந்தவூரில் புதிய முன்பள்ளி கட்டிடம் கிழக்கு ஆளுநரால் திறந்து வைப்பு
Senthil Thondaman
Nintavur
By Kathirpriya
அம்பாறை - நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்ட அல் - ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம் மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (12) திறந்து வைத்தார்.
குறித்த கட்டிடமானது 9.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்பள்ளியை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமாத்திரமல்லாமல் இன்றைய நிகழ்வுக்கான வரவேற்பு நிகழ்வுகள், பெற்றோர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும்.









6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி