பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கமைய இன்று (01) பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பேருந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கலந்துரையாடல் ஒன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
அக்கூட்டத்தில் பேருந்துக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான சதவிகிதங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை போக்குவரத்துச் சபை
இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வரவிருக்கும் அமைச்சரவை முடிவின்படி பேருந்துக் கட்டண உயர்வு செயற்படுத்தப்படும் என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் நிலன் மிராண்டோ தெரிவித்தார்.
எரிபொருள் விலை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் ஆய்வு செய்த பிறகு, பேருந்துக் கட்டண உயர்வின் சரியான சதவீதம் மற்றும் புதிய குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ஆகியவை விரைவில் பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்