தற்போது வாய்ப்பு இல்லை - கோட்டாபய உறுதிபட தெரிவிப்பு
teachers
gotabaya
principal
salary issue
By Sumithiran
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை இந்த நேரத்தில் சரிசெய்யமுடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதற்கான வாய்ப்பு இதுவல்ல. வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் ஆசிரியர்கள் மட்டுமல்லாது ஏனைய அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை சரி செய்வதில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நெருக்கடி இருந்தபோதிலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் சரியான நேரத்தில் செலுத்தியுள்ளதாகவும், இந்த நேரத்தில் ஆசிரியர்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி