தேசபந்துவை கைது செய்ய வாய்ப்பில்லை : தளம் மாறிய இலங்கையின் பாதுகாப்புத் துறை
இலங்கையில் இப்பொழுது எல்லோரையும் தேடுகின்ற படலம் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக முன்னாளில் காவல்துறையில் உயர் பதவி வகித்தவர்களை கூட இன்று தேடியலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தேடப்படும் ஒரு குற்றவாளியாக மாறியிருக்கின்றார். இந்த நிலையில் இவர் தொடர்பிலான தகவல்களை காவல்துறையினர் வழங்குகின்ற போது இவரைப் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாக தென்படுகின்றது.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தவர்கள் அதனை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தும்படி காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன் அவருக்கு யாராவது உதவி செய்தால் அது பெருங்குற்றமாக மாறும் என காவல்துறை ஊடகப் பேபச்சாளர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் தேசபந்து தென்னகோன் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய செவ்வந்தியை கைது செய்வதற்கும் பொது மக்களின் உதவியை நாடிய காவல்துறையினர் பின்னர் பரிசுத் தொகையை அறிவித்தனர்.
ஆனால் செவ்வந்தியைக் கைது செய்ய முடியவில்லை. இப்போது தேசபந்து தென்னக்கோனையும் கைது செய்வதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது.
இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, புலனாய்வுக் கட்டமைப்பு, காவல்துறை என்பவற்றால் முடியாத ஒரு காரியமாக தேசபந்து தென்னக்கோனின் கைது மாறியிருக்கின்றது.
இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்புத்துறையின் இயங்குநிலை என்பது இன்று வேறொரு தளத்தில் இயங்குவது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்