நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் அவ்வாறே வழங்கப்படும் எனவும், இதுவரையில் எவ்வித வெட்டுக்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீண்டும் கையளிக்கப்பட்ட சுமார் 25-30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது நாடாளுமன்ற வாரம்
இதன்போது, மொத்தமுள்ள 108 வீடுகளில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 80 வீடுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீற்றர்களுக்கு மேல் தொலைவில் வீடுகள் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது நாடாளுமன்ற வாரம் டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 6 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்